செய்திகள்
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
சீர்காழி அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சீர்காழி:
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகமும், காவல் துறையும் இணைந்து அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று முககவசம் அணியாமல் வெளியே சென்றவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ரூ.100 அபராதம் விதித்தனர்.