செய்திகள்
வாய்க்கால் தூர் வாரும் பணியை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பெருந்துறை அருகே கீழ்பவானி கிளை வாய்க்காலில் தூர் வாரும் பணி

Published On 2020-06-17 14:00 IST   |   Update On 2020-06-17 14:00:00 IST
பெருந்துறையை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்காலில் யு-9 பாசன சபை சார்பாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னிமலை:

பெருந்துறையை அடுத்த கோவில்பாளையம் கீழ்பவானி வாய்க்காலின் கிளை வாய்க்காலில் யு-9 பாசன சபை சார்பாக ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வாய்க்கால் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பெருந்துறை தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாய்க்கால் தூர் வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

இதில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி பொறியாளர் பொன்னுசாமி, பாசன சபை தலைவர் கலைவாணன், செயலாளர் பழனிசாமி, பொருளாளர் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் சாந்தி, துணைத்தலைவர் உமா மகேஷ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News