செய்திகள்
கொரோனா வைரஸ்

குடியாத்தத்தில் தந்தை, மகளுக்கு கொரோனா

Published On 2020-06-10 13:13 IST   |   Update On 2020-06-10 13:13:00 IST
குடியாத்தத்தில் 70 வயது முதியவருக்கும், அவரின் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குடியாத்தம்:

குடியாத்தத்தில் சுண்ணாம்புப்பேட்டை, வைதீஸ்வரன்நகர், பெரியார்நகர், காமாட்சியம்மன் பேட்டை, புவனேஸ்வரிபேட்டை மற்றும் ஒன்றியத்தில் உள்ள வீ.டி.பாளையம், வி.எஸ்.புரம், செருவங்கி, கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் டாக்டர், மருந்தாளுனர், நர்சு, கர்ப்பிணி, சிறுவர்கள், பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து குடியாத்தம் அம்பாபுரம் ஜி.பி.எம். தெரு கொசஅண்ணாமலை தெரு இடையே ஒரு சந்தில் வசிக்கும் 70 வயது முதியவருக்கும், அவரின் 29 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

வட்டார மருத்துவ அலுவலர் விமல், மருத்துவர் பிரவீன், சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ஆம்புலன்சை வரவழைத்து, அதில் முதியவர், மகளை ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் குடியாத்தம் நகராட்சி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியை செய்தனர். கிருமி நாசினி தெளித்தனர். அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து தடை செய்துள்ளனர்.

Similar News