செய்திகள்
முக கவசம்

காட்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

Published On 2020-06-08 10:24 GMT   |   Update On 2020-06-08 10:24 GMT
காட்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
காட்பாடி:

பொதுமக்களிடம் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும், கடைகளில் பொருட்களை வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்புப்போட்டு கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. 5-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். எனினும், வெளியில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பலர் முகக் கவசம் அணியவில்லை.

வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுவரை மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News