செய்திகள்
கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை- போலீசார் விசாரணை
நாகையில் கடையின் பூட்டை உடைத்து ரூ.90 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகையை சேர்ந்த மாணிக்க சுந்தரம் (வயது 50). இவர் நாகை பெருமாள் கோவில் அருகே ஆட்டோ உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு விற்பனை முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லா பெட்டியில் இந்த ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடி விட்டனர். இன்று காலை கடையை திறக்க வந்த மாணிக்க சுந்தரம் கடை திறந்து கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 3 மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்து சென்றது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்.