செய்திகள்
இருதரப்பினர் மோதல்

பந்தநல்லூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல்- 4 பேர் கைது

Published On 2020-05-30 09:36 GMT   |   Update On 2020-05-30 09:36 GMT
பந்தநல்லூரில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்த வில்லியநல்லூரை சேர்ந்தவர் செல்வம் (30). இவர் தனது பைக்கில் மரசட்டங்களை ஏற்றி கொண்டு, குணதளபாடி சாலையில் திருப்பத்தில் சென்ற போது, சாலையில் அதே பகுதியை சேர்ந் குருமூர்த்தி மகன் விமல் (20) மீது மரச்சட்டம் உரசியது. இதனால் ஆத்திரமடைந்த, விமல், செல்வத்தின் பைக்கையும், மரச் சட்டங்களை பறித்து வைத்து கொண்டார்.

பின்னர், செல்வம், தனது உறவினர்களை அழைத்து வந்து, விமல் தரப்பினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, பைக்கையும், மரச் சட்டத்தையும், வாங்கி சென்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த விமல் தரப்பினர், மன்னிப்பு கேட்காமல், பைக்கையும், மரச்சட்டத்தை எப்படி எடுத்து செல்லலாம் என்று கூறி, உறவினர்களுடன், செல்வம், வீட்டிற்கு சென்று தாக்கினர்.

பின்னர், விமல் தரப்பினர், நடந்து சென்றபோது, செல்வம் தரப்பினரும் சென்று தாக்கினர்.

இதுகுறித்து இருதரப் பினரும், பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், செல்வம் (30), விமல் (20), முத்து (23), அரவிந்த் (26) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News