செய்திகள்
100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள்

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்க உத்தரவு

Published On 2020-05-30 07:51 GMT   |   Update On 2020-05-30 07:55 GMT
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று ஊதியம் வழங்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் சிறு தொழில் செய்வோருக்கு நிதியுதவி தொகுப்புகள் வழங்கப்படுகின்றன. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளுக்கான கடனுதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் வங்கிகளை முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வீடுகளுக்கே சென்று சம்பளத்தை வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 3 மாதங்களுக்கு இந்த நடைமுறை தொடரும் என்றும் கூறி உள்ளார்.

இதுவரை 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களின் வங்கிக்கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்பட்டது. வங்கிகளுக்கே சென்று சம்பளத்தை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கால் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு, நேரடியாக பணத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கான தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ஆக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News