செய்திகள்
கைது

வேதாரண்யத்தில் மின்வாரிய ஊழியரை தாக்கியவர் கைது

Published On 2020-05-28 15:25 IST   |   Update On 2020-05-28 15:25:00 IST
வேதாரண்யத்தில் மின்வாரிய ஊழியரை தாக்கியவரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் மின்சார வாரியத்தில் வேதாரண்யத்தை அடுத்த பெரியகுத்தகை கிராமத்தைச் சேர்ந்த திருச்செல்வம் (வயது 40) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தோப்புத்துறை தோப்புக்காட்டுத்தெரு பகுதியில் மின்சாரம் தடைபட்டு டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அதை சரிசெய்ய வரும்படி மின்சார வாரியத்திற்கு தோப்புத்துறை மீராசுல்தான் (50) என்பவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சுரேஷ் மின்வாரிய பணியாளருடன் ஒப்பந்த பணியாளர் திருச்செல்வமும் இரவு சென்றுள்ளனர். அப்போது மீராசுல்தான் ஏன் இவ்வளவு கால தாமதமாக வருகிறீர்கள் என்று கேட்டு நாங்களே சரிசெய்து விட்டோம் என்று கூறியுள்ளார்.

அதற்கு திருச்செல்வம் சரிசெய்ததை எங்களுக்கு தெரிவித்திருந்தால் இந்த இரவு நேரத்தில் நாங்கள் வந்திருக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த மீராசுல்தான் திருச்செல்வத்தை தரக்குறைவாக திட்டி கையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்கு பதிவு செய்து மீராசுல்தானை கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்.


Similar News