செய்திகள்
கைது

தொழிலாளி கொலையில் நண்பர்கள் 3 பேர் கைது

Published On 2020-05-26 13:09 IST   |   Update On 2020-05-26 13:09:00 IST
செங்கல்பட்டு அருகே தொழிலாளி கொலையில் அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன்(40). ஊராட்சியில் குப்பை வண்டி டிரைவராக இருந்தார். நேற்று இரவு அவர் பழவேலி, பச்சையம்மன் கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் அவரை நண்பர்களான வினோத், உசேன், சுரேஷ் ஆகியோர் கொலை செய்து இருப்பது தெரிந்தது.

அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மதுவாங்க கொடுத்த ரூ.2500-யை கருணாகரண் தொலைத்து விட்டதாக கூறி உள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில் கருணாகரணை கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

Similar News