சினிமா செய்திகள்

'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

Published On 2026-01-16 07:47 IST   |   Update On 2026-01-16 07:47:00 IST
  • இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.
  • இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி. ஜி. தியாகராஜன் வழங்க, தயாரிப்பாளர்களாக செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'லெனின் பாண்டியன்'. இப்படத்தை டி. டி. பாலச்சந்திரன் இயக்கியுள்ளார்.

'லெனின் பாண்டியன்' படத்தில் பல முக்கியமான நட்சத்திரங்கள் இணைந்து பணியாற்றுகின்றனர். இதில் தமிழ் திரைப்பட உலகின் பன்முக திறமையாளராக திகழும் கங்கை அமரன் நடித்துள்ளார். மேலும், நடிகை மற்றும் அரசியல்வாதியான ரோஜா நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் தமிழ் திரையுலகில் திரும்பி வந்துள்ளார். இவர்களுடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன், ஷ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், ஜார்ஜ் மரியன், அர்ச்சனா, மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ. எம். எட்வின் சக்காய் கவனிக்க, தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில், 'லெனின் பாண்டியன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கங்கை அமரன், ரோஜா வயதான தோற்றத்திலும், தர்ஷன் கணேஷ் காவல்துறை உடையில் துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

கிராமப்புறத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 



Tags:    

Similar News