செய்திகள்
செங்கல்பட்டில் இன்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே 779 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 253 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.