செய்திகள்
காட்பாடி பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் ரவி எம்எல்ஏ ஆய்வு
ஓடை பிள்ளையார் கோவில் அருகே உள்ள அம்மா உணவகம், காந்திநகர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காட்பாடி பகுதியில் 2 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த உணவகங்களில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மாதம் 24-ந் தேதி முதல் நாளை 17-ந் தேதி வரை வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சு.ரவி. எம்.எல்.ஏ. தன்னுடைய சொந்த செலவில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பொதுமக்களுக்கு இலவசமாக அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சு.ரவி எம்.எல்.ஏ. நேற்று காட்பாடி வந்தார்.
ஓடை பிள்ளையார் கோவில் அருகே உள்ள அம்மா உணவகம், காந்திநகர் பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஆகியவற்றில் திடீர் ஆய்வு செய்தார். அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சாம்பார் சாதத்தை ருசித்து பார்த்தார்.
மேலும் உணவு சாப்பிட வந்த பொதுமக்களிடம் உணவு தரமாக இருக்கிறதா என கேட்டறிந்தார். அம்மா