செய்திகள்
மாத்தூரில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்
புதுக்கோட்டை அருகே கொரோனா வைரஸ் ஊரடங்கு பற்றியும், வைரஸ் பரவல் தடுக்கும் விதம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
மாத்தூர்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலை ஒன்றியம் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத்தலைவர் அனுப்பிரியா ராமமூர்த்தி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலைச்செல்வி, ராஜேஷ்வரி, பாரதி ராஜா, வியாக்குளம், தர்மராஜ், சுதா சத்யராஜ், மீனாம்பாள் மற்றும் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்கள் கொரோனா வைரஸ் ஊரடங்கு பற்றியும், வைரஸ் பரவல் தடுக்கும் விதம் குறித்தும் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
144 தடை உத்தரவால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம். அத்தியாவசியமான பொருட்கள் வாங்க ஒருவர் மட்டும் செல்ல வேண்டும். தடையை மீறினால் காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் தெரிவித்ததுடன், வைரஸ் பரவலை தடுக்கும் விதம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.