செய்திகள்
விவசாயி

கொரோனா பரவலை தடுக்க தொலைபேசி வழியாக விவசாயிகள் கலந்துரையாடல்

Published On 2020-05-09 15:32 IST   |   Update On 2020-05-09 15:32:00 IST
கொரானா பரவலை தடுக்கும் வகையில் விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே தொலைபேசி வழியாக அலுவலர்களிடம் ஆலோசனைகள் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி:

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட வம்பன் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் தொலைபேசி வழியாக விவசாயிகள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகள் குழுவாகவும் நிறுவனங்களாகவும் இணைந்து செயல்பட வேண்டியதின் அவசியம், அமைப்புகளை உருவாக்க மத்திய மாநில அரசுகள் வழங்கும் நிதி ஆதாரங்கள் மற்றும் இதர திட்டங்கள், வேளாண் தொழில்நுட்பபயிற்சி மற்றும் ஆலோசனைகள், சந்தை வாய்ப்பு தகவல்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
விவசாயிகள் கேள்விகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் ஜெயஸ்ரீ, வணிகதுறை துணை இயக்குநர் சிவகுமார், வம்பன் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் லதா, திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்கல்லூரி பேராசிரியர் செல்வம், நற்கீரர் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத் தலைவர் காமராஜ் ஆகியோர் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொலைபேசி வழியாக கலந்து கொண்டனர்.

கொரானா பரவலை தடுக்கும் வகையில் விவசாயிகள் வீட்டிலிருந்தபடியே அலுவலர்களிடம் ஆலோசனைகள் பெறும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Similar News