செய்திகள்
கொரோனா வைரஸ்

ஆலங்குடி பேரூராட்சியில் கிருமி நாசினி மருந்து தெளிப்பு

Published On 2020-05-08 20:03 IST   |   Update On 2020-05-08 20:03:00 IST
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆலங்குடி பேரூராட்சியில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.
ஆலங்குடி:

ஆலங்குடி தேர்வு நிலை பேரூராட்சி மற்றும் தீயணைப்பு நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 5வது முறையாக இயற்கை வேம்பு, கிருமி நாசினி கரைசல் மருந்து ஆலங்குடி அண்ணாநகர் மற்றும் சில தெருக்களில் தெளிக்கப்பட்டது. ஆலங்குடி தேர்வுநிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர் செழியன் முன்னிலை வகித்தார்.

மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன், கார்த்திக் மற்றும் மீட்பு குழுவினர்கள் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் சண்முக வள்ளி, ரேவதி, விழி கிராமப்புற அறக்கட்டளையின் தலைவர் மணிகண்டன்,பேரூராட்சி தூய்மை மேற்ப்பார்வையாளர் ராஜேந்திரன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News