செய்திகள்
கொரோனா பாதிப்பு- வேலூரில் 30-ஆக உயர்வு
வேலூர் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
வேலூர் காந்தி ரோட்டில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூதாட்டிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் தங்கியிருந்த (36 வயது) மகள் உறவினர் உட்பட விடுதியில் தங்கி இருந்த 47 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மூதாட்டியின் 36 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கணியம்பாடி அருகே உள்ள கொட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்த 43 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டியில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.