செய்திகள்
வேலூரில் இருந்து சென்னைக்கு தினமும் 20 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைப்பு
வேலூரில் இருந்து சென்னைக்கு தினமும் 20 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைக்கப்படுகிறது.
வேலூர்:
சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து மற்ற இடங்களுக்கு சப்ளை செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வேலூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆவின் நிறுவனங்களில் இருந்து தலா 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை மாதவரம் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்க ஆவின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
அதன்படி, வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாதவரம் பால் பண்ணைக்கு தலா 500 மி.லி. எடை அளவு கொண்ட 40 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வருகின்றனர்.