செய்திகள்
கோப்பு படம்

போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மது

Published On 2020-05-06 14:21 IST   |   Update On 2020-05-06 14:21:00 IST
டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே மது வழக்கப்படும் என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.

மது வாங்க வருபர்கள் சுமார் 6 அடி சமூக இடைவெளி விட்டும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும்.

பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்க வேண்டும். டாஸ்மாக் கடையின் அருகே மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும்.

ஒரு சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் மதுபான கடை எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டோக்கன் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மட்டுமே வழங்கப்படும்.

டோக்கன் பெறாதவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்படாது. சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுடன் கூடிய மதுக்கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.

மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த தகவலை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Similar News