செய்திகள்
மின்சாரம் பாதிப்பு

செந்துறையில் கனமழை- மின் கம்பம் முறிந்ததால் மின்சாரம் பாதிப்பு

Published On 2020-05-01 13:16 GMT   |   Update On 2020-05-01 13:16 GMT
வெப்பச்சலனம் காரணமாக செந்துறை பகுதியில் கனமழை பெய்ததால் மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் பாதிக்கப்பட்டது.

செந்துறை:

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் வெப்பச்சலனம் காரணமாக செந்துறை பகுதியில் உள்ள நல்லாம்பாளையம், உஞ்சினி, சிறுகடம் பூர், இரும்புலிக்குறிச்சி, உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஒரு மணிநேரம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது.

உஞ்சினி மற்றும் சிறுகடம்பூர் இக்கிராமங்களி மரங்கள் முறிந்து முறிந்து விழுந்தது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்தது. இதனால் கிராமம் முழுவதும் மின்தடை ஏற்பட்டதோடு, செந்துறை உடையார் பாளையம் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல்அறிந்த இளநிலை மின் பொறியாளர் சரவணன், போர்மேன் பன்னீர் மற்றும் மின் ஊழியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்ரீதேவி, ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் துணைத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்பினரும் விரைந்து வந்து மின் கம்பிகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி சாலை போக்குவரத்தை சீர் செய்தனர்.

Tags:    

Similar News