செய்திகள்
செந்துறையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் உதவி
செந்துறையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலும் இடை விடாது தூய்மைப்பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் மளிககை பொருட்கள் வழங்கப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரத்திலும் இடை விடாது தூய்மைப்பணிகளை செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கும், டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை அ.தி.மு.க. சார்பில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் உதயம் ரமேஷ் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்லம், கடம்பன் ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜமால் முகமது, மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் கலிய மூர்த்தி, ஒன்றிய பொருளாளர் மதியழகன், கிளை செயலாளர் நல்லமுருகன் மற்றும் திரளான அ.தி.மு.க.வினரும் கலந்து கொண்டனர்.