செய்திகள்
கோவிலூரில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் நடந்த போது எடுத்த படம்.

ஆலங்குடி கோவிலுர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்

Published On 2020-04-29 17:35 IST   |   Update On 2020-04-29 17:35:00 IST
ஆலங்குடி கோவிலுர் ஊராட்சியில் கொரோனாவை தடுக்க ஒவ்வொரு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆலங்குடி:

ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிலுரில் ஊராட்சி மன்றத்ததலைவர் பவுலினா எட்வர்ட் மரிய ஜோசப் தலைமையில் ஊழியர்கள் கொரோனாதடுப்பு பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்படி ஒவ்வொரு வீடாக சென்று நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் வீடுகள், தெருக்கள், கடை வீதிகளில் கிருமி நாசினி தெளிப்பது போன்ற நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழை, எளியவர்களுக்கு தினந்தோறும் மதிய உணவு கொடுக்கப்படுகிறது. 

மேலும் கொரோனா வைரசால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றி ஊராட்சி ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Similar News