செய்திகள்
செந்துறையில் மளிகை கடைக்கு சீல் வைப்பு- தாசில்தார் அதிரடி
தடை செய்யப்பட்ட நேரத்தில் திறந்திருந்த மளிகை கடைக்கு சீல் வைத்து செந்துறை தாசில்தார் நடவடிக்கை எடுத்துள்ளார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் அத்தியாவசிய தேவைக்காக திங்கள் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் மளிகை கடை, பெட்டிக்கடைகள் திறக்கலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா உத்தரவிட்டுள்ளார்.
அதனை மீறி ஆங்காங்கே ஒரு சிலகடைகள் திருட்டுத்தனமாக திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்று வந்தன. இதனை செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். அதேபோன்று செந்துறை ராமசாமிநகரில் உள்ள முருகேசன் என்பவரது மளிகைக்கடை தடை செய்யப்பட்ட நேரத்தில் திறந்து வியாபாரம் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற தாசில்தார் முத்துகிருஷ்ணன் அதிரடியாக ஆய்வு செய்து மளிகை கடையை பூட்டி சீல் வைத்தார்.