செய்திகள்
வடமாநிலத்தவர், நரிக்குறவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட காட்சி.

செந்துறை அருகே தங்கியிருக்கும் வடமாநில-நரிக்குறவனர் இன மக்களுக்கு நிவாரண பொருட்கள்

Published On 2020-04-25 16:52 IST   |   Update On 2020-04-25 16:52:00 IST
செந்துறை அருகே ஊரடங்கு காரணமாக தங்கியிருக்கும் வடமாநில-நரிக்குறவனர் இன மக்களுக்கு தேமுதிக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகிலுள்ள ராயல் சிட்டியில் தங்கியிருக்கும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் சில மாதங்களாக இங்கு வசித்து வருகின்றனர்.

மேலும் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், கட்டிட வேலை தேடி வந்தவர்கள் ஊரடங்கால் எங்கேயும் போக முடியாமல் தவித்து வந்தனர். இவர்களுக்கு தே.மு.தி.க. சார்பாக செந்துறை ஒன்றியத்தின் நிர்வாகிகள், தொண்டர்கள் இணைந்து உணவின்றி தவித்த வந்த 50 பேருக்கும், வட மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் அரிசி, பால், காய்கறி, பருப்பு, எண்ணை மற்றும் சமையல் பொருட்கள் வழங்கினர்.

அரியலூர் மாவட்ட முன்னாள் பொருளாளர் ராஜா பன்னீர்செல்வம் தலைமை யில், தே.மு.தி.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், புயல் செல்வம், சரவணன், தர்மலிங்கம், முருகவல்லி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் செல்வி குமார், கல்பனா சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News