செய்திகள்
திருப்பூரில் இன்று காலை விபத்தில் வாலிபர் பலி
திருப்பூரில் இன்று காலை மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருப்பூர்:
ஈரோட்டை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது30). இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி உள்ளார். இன்று காலை காய்கறி வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சந்தைக்கு சென்றார். அங்கு காய்கறிகளை வாங்கி கொண்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பினார். அந்த பகுதியில் உள்ள ஒரு தியேட்டர் அருகே வந்தபோது எதிரே சோளம் ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருப்பூரை நோக்கி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சதீஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.