செய்திகள்
வெங்காய மண்டியில் தேங்கி கிடக்கும் வெங்காய மூட்டைகள்

திருச்சியில் பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி

Published On 2020-04-22 13:48 GMT   |   Update On 2020-04-22 13:48 GMT
திருச்சியில் பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
திருச்சி:

திருச்சியில் கடந்த வாரம் முதல் தரமான ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.30-க்கு விற்பனை ஆனது. இரண்டாம் ரக பெரிய

வெங்காயம் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பெரிய வெங்காயம் விலையில் திடீர் என

வீழ்ச்சி ஏற்பட்டது. திருச்சியில் நேற்று முதல் தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.20-க்கும், இரண்டாம் ரக பெரிய வெங்காயம்

ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் சின்ன வெங்காயத்தின் விலையும் குறைந்து உள்ளது. கடந்த வாரம், முதல் தரமான ஒரு கிலோ சின்ன வெங்காயம்

ரூ.80-க்கு விற்பனை ஆனது. நேற்று இதன் விலை பாதியாக குறைந்து ஒரு கிலோ ரூ.40 ஆனது. இரண்டாம் ரக சின்ன வெங்காயம் ஒரு

கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நேரத்திலும் வெங்காயத்தின் விலை சரிபாதியாக

குறைந்து இருப்பது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில் வியாபாரிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி

உள்ளது.

இதுதொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘வெங்காயம் வரத்துக்கு தகுந்தாற்போல் விற்பனை இல்லை. ஓட்டல்கள் மூடப்பட்டு

விட்டதாலும், வழக்கமாக சித்திரை மாதம் நடைபெற வேண்டிய கோவில் விழாக்கள், அதனையொட்டி நடைபெறும் அன்னதானம்

போன்றவை ஊரடங்கினால் ரத்து செய்யப்பட்டு விட்டதால் வெங்காயம் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. விற்றால் போதும்

என்ற நிலையில் தான் நாங்கள் நஷ்டத்திற்கு வியாபாரம் செய்து வருகிறோம்’ என்றனர்.

Tags:    

Similar News