செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கன்னியாகுமரியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை

Published On 2020-04-22 18:38 IST   |   Update On 2020-04-22 18:38:00 IST
கன்னியாகுமரியில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையை டாக்டர் ஹெரின் சேல்ஸ், செவிலியர் லகில் ஹெரின் ஆகியோர் நடத்தினார்கள்.
கன்னியாகுமரி:

கொரோனா தடுப்பு பணியில் கிருமிநாசினி தெளிப்பது, பிளீச்சிங் பவுடர் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கன்னியாகுமரி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நோய் தொற்று ஏதேனும் இருக்கிறதா? என்பதை கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனையை டாக்டர் ஹெரின் சேல்ஸ், செவிலியர் லகில் ஹெரின் ஆகியோர் நடத்தினார்கள்.

இந்த பரிசோதனை முகாமை குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், உதவி பொறியாளர் இர்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர். இதேபோல் பேரூராட்சியில் பணிபுரியும் மற்ற தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

Similar News