செய்திகள்
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 4,328 பேர் கைது
கரூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 4,328 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
கரூர்:
கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் 42 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். இருப்பினும் கொரோனா தொற்று சமூக பரவலாகிவிடாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அதை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுவோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொடர்புடைய 93 பேர் கைது செய்யப்பட்டனர். 54 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் இதுவரை 4084 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,328 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.