செய்திகள்
மதுரை ஐகோர்ட்

சுகாதார பணியாளர்களின் உடல்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும்- மதுரை ஐகோர்ட்டில் மனு

Published On 2020-04-22 16:55 IST   |   Update On 2020-04-22 16:55:00 IST
கொரோனாவால் உயிரிழக்கும் சுகாதார பணியாளர்களின் உடல்களை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை:

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் சரவண பெருமாள். இவரது சார்பில் வக்கீல் ஜின்னா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிராக போராடும் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள், ராணுவத்தினரை போல தங்களது உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த 2 டாக்டர்கள் உடலை அடக்கம் செய்வதற்கு அந்தந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல.

உயிரையும் பொருட்படுத்தாது கொரோனாவிற்கு எதிராக போராடி உயிரிழக்கும் சூழலில் அவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யவும், அவர்களது வீட்டில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News