செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்

Published On 2020-04-22 13:22 IST   |   Update On 2020-04-22 13:22:00 IST
சென்னையில் கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமனின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் எதிர்ப்பால் மருத்துவர் சைமனின் உடல் வேலங்காடு சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

இதையடுத்து தன் கணவர் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு, டாக்டர் சைமனின் மனைவி உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவர் சைமனின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

இறந்த மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியிடம் போனில் ஆறுதல் கூறினார். மேலும் மகன், மகளின் எதிர்கால நலன் கருதி தைரியமாக இருக்கும்படி ஆனந்தியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார். 

Similar News