செய்திகள்
வேலூரில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்
வேலூரில் தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 50 பேர் தனி விமானம் மூலம் இன்று வங்காளதேசத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் வேலூரில் தங்கியுள்ளனர். இவர்கள் லாட்ஜிகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
இதில் வங்காளதேச நாட்டை சேர்ந்த 50 பேர் 28 நாட்களுக்கு மேல் தனிமையில் இருந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இதை தொடர்ந்து அவர்கள் தங்களது நாட்டுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து வேலூரில் இருந்து 50 பேரும் நேற்று மாலை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து தனி விமானம் மூலம் இன்று வங்காளதேசத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.