செய்திகள்
வேலூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை
வேலூர் அருகே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் உதயகுமார். வேலூரில் கிளப் நடத்தி வந்தார். நேற்று மதியம் சாப்பிடுவதற்காக குட்டை மேடு பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது ஆட்டோவில் வந்த 6 பேர் கும்பல் உதயகுமாரை வழிமறித்து கத்தியால் வெட்டி கொன்றனர்.பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
விசாரணையில் உதயகுமாரை வெட்டிக் கொன்றது அதே பகுதியை சேர்ந்த அப்பு என்கிற இமானுவேல், அட்டப்பா என்கிற நவீன்குமார் அந்திரேஷ், நிர்மல், வெங்கடேசன், ஆல்வா என்கிற ஆரோக்கிய மேரி என்பது தெரியவந்தது. இன்று காலை 4 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கொலையான உதயகுமார் மீது கட்டப்பஞ்சாயத்து உட்பட அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. உதயகுமாருக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் நடந்து 6 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அந்திரேஷ் என்பவரின் தங்கையை 4-வதாக காதலித்து திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதற்கு அந்திரேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அந்திரேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து உதயகுமாரை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.