செய்திகள்
கவுந்தப்பாடியில் 10 ரூபாய்க்கு 3 நுங்கு விற்பனை
கவுந்தப்பாடி பஸ் நிலையத்தில் 3 கண் உடைய சீவிய காய் , தோண்டி எடுத்த 3 நுங்கு ரூ. 10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடியில் கோடை வெயிலுக்கு ஏற்ற நுங்கு விற்பனை நடைபெற்று வருகிறது. கவுந்தப்பாடி பஸ் நிலையத்தில் 3 கண் உடைய சீவிய காய் , தோண்டி எடுத்த 3 நுங்கு ரூ. 10-க்கும் விற்கப்பட்டு வருகிறது.
பனைமரம் ஏறும் தொழிலாளர்கள் போதிய வருமானம் இல்லாததால் வேறு வேலைக்கு சென்று விட்டதால் ஒரு சிலர் மட்டுமே பனை மரம் ஏறி பதநீர் இறக்குவது, நுங்கு விற்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.