செய்திகள்
கொரோனா வார்டு

ஈரோட்டில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற முதியவர் பலி

Published On 2020-04-11 12:03 IST   |   Update On 2020-04-11 12:03:00 IST
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.
ஈரோடு:

கடந்த 8-ம் தேதி முதல் மூச்சு திணறல் காரணமாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 60 வயது முதியவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முதியவருக்கு ஏற்கனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனை இருந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த முதியவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா  பரிசோதனை முடிவுகள் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதியவர் வசித்து வந்த பெருந்துறை பகுதியில் 1 கிமீ சுற்றுக்கு வீதிகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

Similar News