செய்திகள்
கலெக்டர் ஜெயகாந்தன்

சிவகங்கை மாவட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஒரு மணி வரை இயங்க அனுமதி- கலெக்டர் தகவல்

Published On 2020-04-10 16:39 GMT   |   Update On 2020-04-10 16:39 GMT
கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஒரு மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பிரதமரால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும் தமிழக அரசால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 

மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளின் பேரில் அத்தியாவசியப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட காலை 6.மணி முதல் 9.மணி வரை காய்கறி கடைகள் செயல்படவும் 1.மணி வரை இதர அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியுடன் பயிர்சாகுபடி செய்து வரும் விவசாயிகள் நலனுக்காக மின்சாதன கடைகள், பாசன நீர்க்குழாய்கள் விற்பனை நிறுவனம், ஹார்டுவேர் நிறுவனங்கள் மின்மோட்டார் பழுது நீக்கும் பட்டறைகள் ஆகியவை செயல்பட ஏற்கனவே அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் வீட்டு மின்சாதனங்கள் (மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், டிவி, செல்போன் உள்பட) பழுதுநீக்கும் கடைகள் பகல் 1.மணி வரை செயல்படவும் பொதுமக்கள் நலன் கருதி அனுமதி வழங்கப்படுகிறது. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News