செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவை பரப்ப யாரும் விரும்ப மாட்டார்கள்- குணமடைந்த இளம்பெண் பேட்டி

Published On 2020-04-08 11:04 GMT   |   Update On 2020-04-08 11:04 GMT
எந்த ஒரு நபரும் கொரோனா நோய் பரப்ப வேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்று குணமடைந்த இளம்பெண் பேட்டியளித்துள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டை சேர்ந்த 29 வயது இளம்பெண் அவரது 10 மாத குழந்தை, மற்றும் வேலைக்கார பெண் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இளம் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஈரோட்டில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் தான் அவர் கோவைக்கு மாறுதலாகி சென்றார். அப்போது தான் அவருக்கும் அவரது குழந்தை வேலைக்கார பெண்ணுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் இளம்பெண், அவரது குழந்தை, வேலைக்கார பெண் ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இது குறித்து இளம்பெண் கூறியதாவது:- எனக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என்னை விட எனது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று இருந்ததை கண்டு மிகவும் கவலை அடைந்தேன்.

எனக்கு நண்பர்கள், வேலை செய்த இடத்தில் இருந்தவர்கள் நம்பிக்கை அளித்தனர். கொரோனா தொற்று குறித்து யாரையும் பழி சொல்லக்கூடாது. காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும்.

எந்த ஒரு நபரும் நோய் பரப்ப வேண்டும் என விரும்ப மாட்டார்கள். நாம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நன்றி

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News