செய்திகள்
அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு தொலைக்காட்சி - யூடியூப் வழியாக பாடம்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2020-04-07 08:25 GMT   |   Update On 2020-04-07 08:25 GMT
10-ம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு யூடியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் ஒருவர் கூட வைரஸ் தாக்குதலால் உயிர் இழக்க கூடாது என இரவு, பகல் பாராது ஒவ்வொரு அரசுத் துறையும் செயல்பட்டு வருகிறது.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரின் ஒரு நாள் ஊதியம் ரூ. 70 கோடி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்.

மாணவர்கள் நலன் கருதி 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்காக அரசு யூடியூப் சேனல் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நாட்டுப்புற கலைஞர்கள், கிராமிய கலைஞர்கள், திருமண நிகழ்ச்சிக்கு இசை நிகழ்ச்சிகள் நடத்துவோர் என அனைவருக்கும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News