செய்திகள்
ப.சிதம்பரம்

முக்கியமான 2 வாரம்- கொரோனா பரிசோதனையை பரவலாக்க ப.சிதம்பரம் வேண்டுகோள்

Published On 2020-04-06 04:30 GMT   |   Update On 2020-04-06 04:30 GMT
எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது என்றும், கொரோனா குறித்த பரிசோதனையை மிகப் பரவலாக செய்ய வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை:

கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. 4067 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். 

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- 



இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். எல்லா வல்லுநர்களும் ஒரு முகமாக ஏற்றுக் கொள்ளும் கருத்து: மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News