செய்திகள்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்: நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆய்வு

Published On 2020-03-31 14:52 GMT   |   Update On 2020-03-31 14:52 GMT
கீரனூர் பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீரனூர்:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷாராணி மேற்பார்வையில் கிருமி நாசினி மருந்துகளும், பிளீச்சிங் பவுடர் போன்றவைகளும் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் அனைத்து வார்டுகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது.

கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ. நார்த்தா மலை ஆறுமுகம், காந்தி நகர், பள்ளிவாசல் வீதி, சிவன் கோவில் போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற் கொண்டு கிருமி நாசினி மற்றும் பவுடர் தூவிய நார்த்தாமலை ஆறுமுகம் எம்.எல்.ஏ. அனைத்து மக்களையும் சந்தித்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும், வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

எம்.எல்.ஏ.வுடன் செயல் அலுவலர் ஆஷாராணி, துப்புரவு மேஸ்திரி மகேஸ் வரி, நகர அ.தி.மு.க. செயலா ளர் ரவிச்சந்திரன், துணைச் செயலாளர் அப்துல் கனி, வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் கருப் பையா ஆகியோர் உடன் சென்றனர்.
Tags:    

Similar News