செய்திகள்
கோப்புப்படம்

போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிப்பு

Published On 2020-03-11 10:27 GMT   |   Update On 2020-03-11 10:27 GMT
ஈரோடு சென்னிமலை ரோட்டில் ஊதிய உயர்வு வழங்க கோரி இன்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் நீடித்து வருகிறது.
ஈரோடு:

ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன், அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவங்க கோரி நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் துவங்கினர்.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, கடந்த 2019 செப்டம்பர் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இது பற்றி போக்குவரத்து துறையிடம் கோரிக்கை மனு வழங்கியும், இதுவரை பேச்சுவார்த்தை துவங்கவில்லை. 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முன்னதாக கடந்த பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. இன்று நடந்த காத்திருப்பு போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் முருகையா தலைமை வகித்தார். இது குறித்து அவர் கூறும்போது, நேற்று காலை தொடங்கிய எங்களது காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் நீடித்தது. இன்று காலை 7 மணிக்கு பின் பணி முடிந்தவர்கள் பலரும் ஒன்றுகூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
Tags:    

Similar News