செய்திகள்
வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் ஊழியர்கள்

Published On 2020-03-09 17:50 IST   |   Update On 2020-03-09 17:50:00 IST
விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் ஊழியர்கள் தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.
குடியாத்தம்:

கோடைகாலம் என்பதால் குடியாத்தம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு வனப்பகுதியில் உள்ள மான் குட்டைகளில் தண்ணீர் நிரப்புமாறு வேலூர் மாவட்ட வன அலுவலர் பார்கவ்தேஜா ஆகியோர் குடியாத்தம் வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதனையடுத்து குடியாத்தம் வனப்பகுதியில் உள்ள மோர்தானா, மூங்கில் புதர், சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, தன கொண்டபள்ளி, தீர்த்தமலை, சூராளூர், கொட்டாரமடுகு, கல்லேரி, ஈஸ்வரன்குட்டை, கே.புதூர், முதலியார் ஏரி உள்ளிட்ட வனப்பகுதியில் உள்ள 21 தண்ணீர் தொட்டிகளில் டிராக்டர்கள் மூலம் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த பணி ஜீலை மாதம் வரை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News