செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

பிராய்லர் கோழி முட்டை-இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா வராது: விஜயபாஸ்கர் பேட்டி

Published On 2020-03-06 11:59 GMT   |   Update On 2020-03-06 11:59 GMT
பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் தாக்காது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வ மாக இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா நோய் இருக்கிறது என்று அறிவித்துள்ளார். ஆனால் தமிழகத்தில் இன்று வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதால் நோய் இதுவரை வர வில்லை.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து எந்தவிதமான பதட்டமும், பீதியும் அடைய வேண்டாம். அதேபோல் வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும்.


பிராய்லர் கோழிகள் மற்றும் இறைச்சி, முட்டை ஆகியவை சாப்பிடுவதால் இந்த நோய் பரவும் என்ற கருத்து தவறானது. சீனாவில் இந்த நோய் தாக்கத்தால் 2 சதவீத இறப்பு தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. சீனாவை தவிர்த்து மற்ற இடங்களில் இறப்பு சதவீதம் என்பது 0.2 சதவீதம்தான்.

கொரோன வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News