செய்திகள்
திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்ட காட்சி.

வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல்: திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகை

Published On 2020-03-04 10:10 GMT   |   Update On 2020-03-04 10:10 GMT
வாலிபர் மீது இன்ஸ்பெக்டர் தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து திருப்போரூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது.

திருப்போரூர்:

திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு நேற்று மாலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிசாமி தரிசனம் செய்ய வந்தார்.

இதற்காக திருப்போரூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் ஜீப் தேர்நிற்கும் இடத்தின் அருகில் உட்கார்ந்திருந்த முனுசாமி என்ற முதியவர் மீது லேசாக இடித்ததாக கூறப்படுகிறது.

இதில் முதியவர் கீழே விழுந்தார். இதை பார்த்த அங்கு பெயின்டிங் பணியில் ஈடுபட்டிருந்த சான்றோர் வீதியைச்சேர்ந்த முரளி என்பவர் தட்டிக் கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் நடுரோட்டில் முரளியை தாக்கினார். பின்னர் அவரை மட்ட போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விட்டனர். இதற்கிடையே காயம் அடைந்த முதியவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீசார் சிகிச்சை அளித்து விட்டு அவரை அங்குள்ள சத்திரம் அருகே விட்டுசென்று விட்டனர்.

போலீஸ் நிலையத்தில் முரளி இருப்பதை அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் முரளி விடுவிக்கப்பட்டார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

Tags:    

Similar News