செய்திகள்
மாம்பூக்கள்

வேதாரண்யத்தில் பனியால் கருகும் மாம்பூக்கள்- விவசாயிகள் வேதனை

Published On 2020-02-24 09:35 GMT   |   Update On 2020-02-24 09:35 GMT
வேதாரண்யத்தில் பனிப்பொழிவின் காரணமாக மாம்பூக்கள் கருகி வருகின்றன. மேலும் பனிப்பொழிவால் பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம்பஸ் ஆகிய மாமரங்கள் பூக்காமல் காணப்படுகிறது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுக்காவில் ஆயக்காரன் புலம், கத்தரிப்புலம், செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், குரவப்புலம், நாலுவேதபதி வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்றது. இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை இப்பகுதியில் விளைந்தன. மாம்பழ சீசன் காலத்தில் இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் டன் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

கஜா புயலுக்கு பிறகு மாமரங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. தற்போது வேதாரண்யம் பகுதிக்கு வெளியூர்களிலிருந்து ஒட்டு மாங்காய்கள் விற்பனைக்கு இங்கு வருகின்றன. தற்போது பனிப்பொழிவின் காரணமாக மாம்பூக்கள் கருகி வருகின்றன. மேலும் தேன்வண்டு காரணமாக பூக்கும் ருமேனியா, ஒட்டு, கெளதாரி, செந்தூரா ஆகிய மா வகைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் பனிப்பொழிவால் பங்கனப்பள்ளி, நீலம், மல்கோவா, இமாம்பஸ் ஆகிய மாமரங்கள் பூக்காமல் காணப்படுகிறது.

இதனால் விளைச்சல் பாதிக்கும் நிலை உள்ளது. தேன்வண்டு என்று அழைக்கப்படும் தத்துப்பூச்சி தாக்குதலால் பிஞ்சி பிடித்திருக்கும் மாமரங்களும் பிஞ்சுகள் கருகி கொட்டுகின்றன. இதனால் மா விளைச்சலை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு வகையான மருந்துகளை அடித்து வருகின்றனர்.

கஜா புயலால் மாமரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டது. புதிதாக நடப்பட்ட மாங்கன்றுகள் பலன் தர குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். தற்போது காய்ப்பிற்கு வரும் மரங்களும் பனிப்பொழிவு வண்டு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பூ கருகுதலும் பிஞ்சு உதிர்ந்து கொட்டுகிறது. இதனால் கடுமையான விளைச்சல் பாதிப்பு இருக்கும் என விவசாயி செம்போடை ஜெகநாதன் தெரிவித்தார்.

பூச்சி தாக்குதல் பனிப்பொழிவு இவற்றிலிருந்து மா விவசாயத்தை பாதுகாக்க விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை தோட்டக்கலைத்துறை வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News