செய்திகள்
தற்கொலை

அந்தியூரில் 94 வயது முதியவர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2020-02-23 20:26 IST   |   Update On 2020-02-23 20:26:00 IST
அந்தியூர் அருகே கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறையில் 94 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டார். மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது மகன்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

அந்தியூர்:

அந்தியூர் அருகே உள்ள தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மூஞ்சப்பன் என்கிற முத்துகவுண்டர்(வயது 94). அப்பகுதியில் உள்ள அழகுமுத்து மாரியம்மன் கோவில் முன்னாள் முதன்மைதாரர் ஆவார்.

இந்நிலையில், கோவில் வளாகத்தில் உள்ள கழிப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட நபர்கள், அதே பகுதியில் உள்ள அவரது மகன் வீட்டுக்கு கொண்டு சென்று கிடத்தினார்கள்.

அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மகன்கள் லட்சுமணன், தங்கராசு ஆகியோர் அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறினர். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார், கோவில் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

Similar News