செய்திகள்
கோப்பு படம்

நகை கடையில் போலி செக் கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி - 3 பேருக்கு வலைவீச்சு

Published On 2020-02-08 18:59 IST   |   Update On 2020-02-08 18:59:00 IST
தாம்பரம் அருகே நகை கடையில் போலி செக் கொடுத்து ரூ.45 லட்சம் மோசடி செய்த உதவி மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தாம்பரம்:

தாம்பரம் சானடோரியம் ஜி.எஸ். சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் பார்த்திபன் என்பவர் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நகைக் கடை சார்பில் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நகைக்கடையில் உதவி மேலாளராக வேலை செய்த பார்த்திபன், வெங்கடேசன், நம்ஆழ்வார் ஆகியோர் போலி செக்கை பயன்படுத்தி ரூ.45 லட்சம் மதிப்பில் நகை மோசடி செய்ததாக கூறப்பட்டிருந்தது.

போலீஸ் விசாரணை நடத்தியபோது பார்த்திபன், வெங்கடேசன், நம்ஆழ்வார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் மீது வழக்குபதிவு செய்த தாம்பரம் போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Similar News