செய்திகள்
பள்ளிக்கரணையில் கள்ளக்காதலியுடன் ஆட்டோ டிரைவர் தற்கொலை
பள்ளிக்கரணையில் கள்ளக்காதலியுடன் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை:
பள்ளிக்கரணை கக்கன்ஜி தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 46). ஆட்டோ டிரைவர். மனைவியை விவாகரத்து செய்த அவருக்கு கூடுவாஞ்சேரி மோகனபிரியா நகரை சேர்ந்த ராணி (33) என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில் சுரேசின் வீடு நீண்ட நேரம் திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் கதவை உடைத்து பார்த்த போது சுரேசும், ராணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பது தெரிந்தது. அவர்கள் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.