செய்திகள்
கடலில் விசைப்படகில் சென்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட கடலோர பாதுகாப்பு போலீசார்.

நாகை மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை

Published On 2020-02-06 14:22 GMT   |   Update On 2020-02-06 14:22 GMT
நாகை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் இன்று கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டத்தில் கடற்கரை பகுதியில் இன்று சவார்க்கர் என கூறப்படும் கடலோர பாதுகாப்பு ஒத்திகையானது நடைபெற்றது.

கடல்வழியாக கள்ளத்தனமாக அந்நியர்கள் யாரேனும் உள்ளே நுழைகிறார்களா?, கடல் வழியாக தங்கம், கஞ்சா உள்ளிட்டவைகள் கடத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர். கடலோர காவல் படை டி.எஸ்.பி குமார், இன்ஸ்பெக்டர் முத்து ராமலிங்கம் மற்றும் போலீசார் நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து செருதலைக்காடு வரை கடலில் விசைப்படகு மூலம் சென்று ஆய்வு செய்தனர். 

அதேபோல் மீனவர்களிடம் அன்னியர்கள் யாரேனும் உள்ளே நுழைந்தாலா? அல்லது சந்தேகப்படும்படியான ஆட்கள் கப்பலில் வந்தலோ உடனடியாக கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி வலியுறுத்தினர்.

Tags:    

Similar News