செய்திகள்
சிறுத்தை நடமாட்டம்

ஏலகிரிமலை அடிவாரத்தில் சிறுத்தை நடமாட்டம்

Published On 2020-02-04 09:58 GMT   |   Update On 2020-02-04 09:58 GMT
ஏலகிரிமலை அடிவாரத்தில் சிறுத்தை புலி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஜோலார்பேட்டை:

ஏலகிரி மலை அடிவாரத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. விவசாயிகள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மண்டலவாடி காமராஜபுரத்தை சேர்ந்த விவசாயி முரளி என்பவருக்கு சொந்தமான ஆடுகளை விவசாய நிலத்தில் கட்டி வைத்திருந்தார்.

நேற்று இரவு சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் புகுந்தது. ‌ அது கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்தது. இதில் 2 ஆடுகள் இறந்தன. 4 ஆடுகள் படுகாயமடைந்தன. ஒரு ஆட்டை சிறுத்தை தின்று விட்டு சென்றுள்ளது.

இன்று காலை சிறுத்தை கடித்து ஆடு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் சென்று பார்த்தபோது சிறுத்தை கால்தடம் இருந்ததது.

இன்று காலை மண்டலவாடி வனப்பகுதியில் சிறுத்தை சுற்றிதிரிந்தது. அதனை பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

இது தொடர்பாக ஏலகிரி மலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News