செய்திகள்
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வருவார். சட்டசபை தேர்தல் வரும்போது அவர் அரசியலில் இருப்பார் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
ஈரோடு:
ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் கட்டாயம் அரசியலுக்கு வருவார். சட்டசபை தேர்தல் வரும்போது அவர் அரசியலில் இருப்பார். ரஜினிகாந்தை ஏதாவது குறைகூறிக் அச்சுறுத்தி, மிரட்டி போயஸ் கார்டனுக்குள் முடக்க நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.
ஈ.வெ.ரா குறித்து அவர் தவறாக பேசவில்லை. என்னைக் கேட்டால் அவர் ஈ.வெ.ரா குறித்தே பேசவில்லை என்று தான் சொல்லுவேன். இந்த விவகாரத்தில் ஒரு சிலர் அரசியலுக்காக பேசி வருகின்றனர். அவரும் அதை பற்றி கவலைப்படவில்லை.
வழக்கம் போல் மிகுந்த உற்சாகத்துடன் அரசியலுக்கு வர உள்ளார். அரசியல் கட்சியை விரைவில் தொடங்க உள்ளார் என்பதை நான் அறிவேன். அதுவரை நாம் அவருக்காக காத்திருந்து தான் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.