செய்திகள்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்

வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம்

Published On 2020-01-27 10:11 GMT   |   Update On 2020-01-27 10:11 GMT
வருகிற 31, 1ஆம் தேதிகளில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:

வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 31ம் தேதி மற்றும் 1ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 20 சதவீதம் அதிகரித்து வழங்க வேண்டும். வாரத்தில் வேலை நாட்கள் ஐந்தாக இருக்கவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர வேண்டும் உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் அதிகாரிகள் ஊழியர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2800 ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரம் கோடி பணம் வர்த்தகம், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

31-ம் தேதி எஸ்.கே.சி ரோட்டில் அனைத்து வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News